இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலை வீதம்!!

இலங்கையில் கடந்த ஆண்டு மட்டும் 3,200 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர் அனுலா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை குறிக்கும் வகையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்கொலை சம்பவங்களின் அடிப்படையில் உலகில் 15 வது இடத்தில் இலங்கை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 995 ஆம் ஆண்டில் உலகில் அதிக தற்கொலை பதிவான நாடு இலங்கையாக இருந்ததாகவும், அந்த வருடம் 8,449 தற்கொலை வழக்குகள் பதிவாகியதாகவும், நாளாந்தம் குறைந்தது 25 தற்கொலை வழக்குகள் பதிவாகிய நிலையில், அதே ஆண்டில், ஒவ்வொரு 100,000 பேரிலும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்னும் நாட்டின் நிலைமை திருப்திகரமாக இல்லை என்றும், ஒவ்வொரு 10 தற்கொலை முயற்சிகளிலும் ஒரு தற்கொலை இறப்பு நடக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு தற்கொலைகளை தடுப்பதற்காக 1926 என்பது 24 மணிநேர ஹொட்லைன் வசதி பொதுமக்களிற்காக சேவையினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கருத்தரங்கில் கலந்துகொண்ட தற்கொலை தடுப்பு பணிக்குழுவின் தலைவர் பேராசிரியர் சமுத்ர காத்ரியராச்சி கூறுகையில், 1926 என்பது 24 மணிநேர, மூன்று மொழிகளிலும் பயிற்சி பெற்ற தாதியர்களால் இயக்கப்படுகிற ஹொட்லைன் என்றும் , இதில் ஆலோசகராக உள்ள மனநல மருத்துவரால் மேற்பார்வையிடப்படுகிறதாகவும் 1333 ஹொட்லைனும் இதே சேவையை வழங்குகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொள்பர்களில் பெரும்பாலோர் 21 முதல் 25 வயது வரையானவர்களும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுமே உள்ளடங்குகின்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஆண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிற அதேநேரத்தில் பெண் தற்கொலை விகிதம் குறைந்து வருகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor