நோர்மண்டிப் படையெடுப்பின் நினைவுகூரல்!!

நோர்மண்டிப் படையெடுப்பின் 75 வது ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் தெரேசா மே மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோர் முன்னாள் படைவீரர்களுக்கு நாம் சொல்லும் ஒரே வார்த்தை “நன்றி” என்று கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் டி-டே நிகழ்வில் கலந்து கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவிக்கையில்; நோர்மண்டியில் தரையிறங்கிய படையினர் வடக்குப் பிரான்சினைக் கைப்பற்றி எங்களுக்குச் சுதந்திரத்தை வழங்கினார். நாம் நிச்சயமாக அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

நோர்மண்டியில் தரையிறங்கிய பிரித்தானிய வீரர்கள் கரையோரமாகச் சென்றதைக் குறிக்கும் நினைவு நிகழ்வுகள் முதலில்  நடைபெற்றன.

தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓமஹா கடற்கரையில் உள்ள அமெரிக்க வீரர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.

தரைப்படை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கூட்டுநடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட நோர்மண்டிப் படையெடுப்பின் 75 வது ஆண்டு நினைவு நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் முதலான நேசநாட்டு அணிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் அவர்களின் சேவைகளும் இங்கு நினைவு கூரப்பட்டன.


Recommended For You

About the Author: Editor