வெலிகந்தையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம் மீட்பு

வெலிக்கந்தை தேசிய பண்ணையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவா் பண்ணையின் பொறுப்பாளரான கேகாலைப் பகுதியைச் சேர்ந்த டி.எம். தர்மரெத்தின (வயது 48) என்பவரே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி பண்ணைப் பொறுப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாகக் கிடப்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த நபர் பண்ணையைப் பராமரிப்பதற்கென்ற நோக்கத்தில் அனுமதி பெற்ற துப்பாக்கி இருந்துள்ளது

விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில்

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்