யாழில்.வெள்ளைமாளிகை போன்று கட்டடம் – ரணில் அடிக்கல் நாட்டவுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை நினைவுபடுத்துவதாய் பெரு மிடுக்கோடு அமைந்திருந்த யாழ்ப்பாணம் மாநகர நகர மண்டபம் உள்நாட்டு யுத்தத்தில் சேதமடைந்த நிலையில் மீண்டும் அதே மிடுக்குடன் எழவுள்ளது.

இந்த யாழ்ப்பாணம் மாநகர நகர மண்டபம் அமைப்பதற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினால் நாட்டி வைக்கப்படவுள்ளது.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு அமையவுள்ள குறித்த மாநகரத்திற்கான மண்டபத்திற்காக 2019 ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகாள குறித்த திட்டத்திற்கான நிதி பகுதி பகுதியாக ஆண்டு ரீதியில் விடுவிக்கப்படவுள்ள நிலையில் முதல் கட்ட நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த மண்டபத்திற்கான பணிகளிற்கு கூறுவிலை கோரப்பட்டு 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபாவிற்கு மேற்படி பணிக்கான ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அமைச்சினால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதமருடன் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்