ரிசாட் மீது மேலும் முறைப்பாடு!!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மீதான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவிடம் நேற்றுவரை ஒரேயொரு முறைப்பாடே பதிவாகியிருந்தது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது முறைப்பாடு பதிவு செய்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாக சிங்கள வர்த்தகர்கள் புறக்கணிக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். சதொச நிறுவனத்தின் ஊடாக மனித நுகர்விற்கு தகுதியற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor