பிரித்தானியாவினை விட்டு வெளியேறும் ஹரி-மேகன் தம்பதியினர்?

இளவரசர் ஹரி – மேகன் தம்பதியினர் பிரித்தானியாவினை விட்டு வெளியேறத்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவரசர் ஹரி-மேகன் தம்பதி தற்போது Windsor Castle பகுதியிலுள்ள Frogmore Cottage இல் வசித்து வருகின்றனர்.
Herefordshire இல் உள்ள சொத்துகளை எடுத்துக்கொள்ளுமாறு இளவரசர் சார்லஸ் விடுத்த கோரிக்கையை ஹரி நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Welsh Borders எல்லைகளுக்கு அருகே ஹரிக்கு சார்லஸ் நிலம் ஒதுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஹரி அதில் சிறிதும் அக்கறை காட்டவில்லை எனவும், அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறவுள்ளமை காரணமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக ஹரியின் நண்பர்கள் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகனின் சொந்த நகரமான Los Angeles இற்கு ஹரி குடும்பத்துடன் இடம்பெயரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன், இளவரசர் ஹரி-மேகன் தம்பதிகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor