கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேப்டன்..!!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஹேமில்டன் மசகாட்சா அதிரடியாக அறிவித்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வரும் 13ம் தேதி முதல் 24 வரை ஜிம்பாப்வே டி 20 முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.

இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறப் பட்டிருப்பதாவது: வங்கதேசத்தில் நடக்கும் டி20 முத்தரப்பு தொடர் முடிந்த பின், ஹேமில்டன் மசகாட்சா அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

அவரின் இந்த முடிவு குறித்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓய்வு அறிவிப்பு வலதுகை பேட்ஸ்மேனான மசகாட்சா, 2001-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 சதங்கள், 42 அரை சதங்கள் உள்பட 9,410 ரன்கள் குவித்துள்ளார்.

தடை விதிக்கப்பட்டது ஜிம்பாப்வே அணிக்கு சமீபத்தில் ஐசிசி விதித்த தடைக்குப் பின் சாலமன் மையர் ஓய்வு அறிவித்தார்.

இப்போது, மசகாட்சா அறிவித்துள்ளார். ஜூலையில் ஐசிசி கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் இல்லை அதன்படி, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தவில்லை.

எனவே, அந்த அணியை சஸ்பெண்ட் செய்து, ஐசிசி போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் அதிர்ச்சி ஜிம்பாப்வே அணியிலும், நிர்வாகத்திலும் ஏற்கனவே பல கட்டங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக புகார்கள் இருந்தன.

அணியில் வீரர்களை தேர்வு செய்வதிலும், அவர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பல முறைகேடுகள் நடந்ததாக ஐசிசி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது முக்கிய வீரர்களின் ஓய்வு அறிவிப்பு, அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor