தேனியில் விபத்து – ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் , துணை நடிகர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குறித்த விபத்தில் சாலிக்கிராமத்தை சேர்ந்த ஒளிப்பதிவாளரான சிவா (வயது 55) என்பவரே உயிரிழந்தவராவார். அவருடன் காரில் பயணித்த கோடங்கிப்பட்டியை சேர்ந்த துணை நடிகர் தவசி (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
கோம்பை மலையடிவார பகுதியில் கடந்த 25 நாட்களாக டி.வி. தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமராமேன் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்றும் படப்பிடிப்பு நடைபெற இருந்தது.
படப்பிடிப்பு தளத்திற்கு இருவரும் காரில் சென்ற போது ,கோம்பை இரட்டை புளியமரம் பகுதியில் கார்  கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Recommended For You

About the Author: ஈழவன்