யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி!!

மஹவிலச்சி உலுக்குளம் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை வரும் சப்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குறித்த பெண் வீட்டின் வெளியே வந்து பார்த்த போதே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் மஹவிலச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உலுக்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor