சஜித் அணி ரணிலின் உத்தரவை புறக்கணிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆதரவை கோரும் வகையில் சஜித் அணியால் நடத்தப்பட்டுவரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக எதிர்வரும் 5 ஆம் திகதி குருநாகலில் நடத்த திட்டமிட்ட கூட்டத்தை நிறுத்துமாறு ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டபோதிலும் அதனை நடததுவதென்ற முடிவில் சஜித் அணி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.µ

கடந்த வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்டதலைவர்களாக உள்ளவர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டினார். இதன்போது தனக்கும் சஜித்துக்கும் ஆதரவளிக்கும் அவர்களிடம் கட்சியின் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பேரணி மற்றும் கூட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

எனினும் சஜித் அணி திட்டமிட்டவாறு எதிர்வரும் 5 ஆம் திகதி குருநாகலில் பேரணி நடத்துவதில் உறுதியாக உள்ளது.

இதேவேளை மாலைதீவு சென்றுள்ள பிரதமர் நாளை நாடுதிரும்பியவுடன் எதிர்வரும் 07 ஆம் திகதி தற்போது கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிநிலை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.


Recommended For You

About the Author: Editor