மின்சாரதீதில் சிக்கி மூவர் பலி!!

இலங்கையின் கொணகமுல்ல, தலஹகம அகுரெஸ்ஸ காவற்துறைப் பிரிவில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பு ஒன்றில் சிக்கி இன்று (06) காலை 7.30 மணி அளவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 45 வயதுடைய கமகே, 56 வயதுடைய அமர விக்ரமகே சந்ரதாச, 78 வயதுடைய மதரசிங்ககே டேவிட் ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகுரெஸ்ஸ காவற்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor