டிப்ளோமாதாரிகள் 4 ஆயிரத்து 286 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4 ஆயிரத்து 286 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.

இவர்களுள் 2 ஆயிரத்து 340 பேர் சிங்கள மொழியிலும், ஆயிரத்து 300 பேர் தமிழ் மொழியிலும், 646 பேர் ஆங்கிலம் மொழியிலும் 3 வருட காலம் கற்கை நெறியினைத் தொடர்ந்த பின்னர் 1 வருட காலம் ஆசிரியர் தொழிற்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த நகழ்வில் கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்