கொலை குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை

மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக மூவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த மூவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பாணந்துறை மேல் நீதிமன்றத்தினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

2009 ஆம் பெப்ரவரி மாதம் மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நால்வரை விடுதலை செய்த நீதிமன்றம், ஏனைய மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்