11ம் திகதி சஜித்திற்கு முக்கிய தேர்வு

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் பொறுப்புக்களை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க ஐ.தே.க தலைமை தீர்மானித்துள்ளது.

ஐ.தே.க சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, பிரச்சார பொறுப்புக்களை கவனித்து, பிரதேசசபையை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு சஜித்தின் தலையில் சுமத்தப்பட இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக, வரும் ஒக்ரோபர் 11ம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருக்கும் சஜித் தரப்பு, தமக்கு கிராமமட்டத்தில் செல்வாக்குள்ளதாக கூறி வருகிறது.

இதையடுத்து, அதை நிரூபிக்க வேண்டிய சவாலை ஐ.தே.க தலைமை ஏற்படுத்தியுள்ளது.

2011ம் ஆண்டு தேர்தலில் எல்பிட்டிய பிரதேசசபையை ஐ.தே.க கைப்பற்றியிருந்தது. எனினும், கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கவிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்த பெரமுன, பல சபைகளை கைப்பற்றியிருந்தது.


Recommended For You

About the Author: Editor