இந்து சமுத்திர மாநாடு ரணில் தலைமையில்

மாலைதீவில் இந்து சமுத்திர மாநாடு இன்று ஆரம்பமாகின்றது.

மாலைதீவு சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். அத்துடன் மாலைதீவு நாடாளுமன்றத்திலும் அவர் இன்று உரையாற்றவுள்ளார்.

இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்து சமுத்திர மாநாட்டிற்கு மாலைதீவு அரசாங்கம் மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகளுக்கான எஸ்.ராஜரட்ணம் நிலையம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.

பிரதமர் தலைமையிலான இலங்கை தூதுக் குழுவின் விஜயம் மற்றும் மாநாட்டை முன்னிட்டு அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலைதீவுக்கு மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தில் நேற்று மாலைதீவு ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் 4 புதிய ஓப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor