தனித்துவ தன்மையை பாதிக்க கூடாது-நிமல்!

பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தையின்போது, மேற்கொள்ளப்படும் விட்டுக்கொடுப்புக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்துவ தன்மையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாதென அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்றுவரும், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிமல் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களினால்தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

ஆகையால் இனி எடுக்கப்படும் தீர்மானங்கள் தீர்க்கமானவையாக நிச்சயம் இருக்கும். சுதந்திரக்கட்சிக்கு ஆட்சியமைக்க கூடிய அதிகாரம் இல்லாவிடினும் ஆட்சியாளரை தெரிவு செய்யக்கூடிய பலம் இருக்கின்றது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்றமையினால் எமது தீர்மானம் எதிர்ப்பார்ப்பானதாக அமைந்துள்ளது. ஆட்சியை கைப்பற்ற முடியாதமக்கள் விடுதலை முன்னணியே தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், நாமும் தீர்க்கமான முடிவை எடுப்போம்.

இதேவேளை பொதுஜன பெரமுன- சுதந்திக்கட்சி ஆகியன கூட்டணி பேச்சுவார்த்தையின்போது முறையான விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.

ஆனாலும் இந்த விட்டுக் கொடுப்புகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்துவ தன்மையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor