
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு – சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என சிறிலங்கா பொதுஜன முன்னணின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்