கொக்குவிலில் வாள்வெட்டுகுழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளது.

முகத்தை கறுத்தத் துணியால் கட்டியவாறு 4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் சென்றதாகவும் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor