சொகுசு படகில் தீ விபத்து – 25 சடலங்கள் மீட்பு

கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் என்ற தீவிற்கு அருகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட சொகுசு படகில் 38 பேர் பயணித்ததாகவும், இதுவரையில் 25 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்