சேரனின் இயக்கத்தில் விஜய்சேதுபதி

பிக்பாஸ் மூன்றாவது சீசன் 70 ஆவது நாளை கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படி இயக்குனர் சேரனிடம் கேள்வி கேட்ட ஒரு பெண், “பிக்பாஸூக்கு பிறகு, திரைத்துறையில் உங்கள் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும்?” என கேட்டார். அப்போது இந்த கேள்வியை ரசித்த கமல்ஹாசன், ‘இது கேள்வியல்ல, வாழ்த்து’ என தனது பாணியில் சொல்லி சிரித்தார்.

பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த சேரன், “நிச்சயம் எனது ‘கம்பேக்’ ஒரு ‘ஸ்ட்ராங்கான கம்பேக்’ ஆகத்தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என கூறினார் சேரன்.

ஆகஸ்ட் 2 ஆம் திகதி, சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக நுழைந்தேன் என்ற காரணத்தை கூறும் போது, விஜய் சேதுபதியின் மூலமாகத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே தெரியும். அவரால் தான் உள்ளேயே நுழைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சித்து வருகிறேன்’ என்று கூறியிருந்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்