பிக்பொஸ் வீட்டில் அதிர்ச்சியில் உறைந்துள்ள கவின்

பிக்பாஸ் வீட்டில் சாக்சி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சாக்சியை ஷெரினும், அபிராமியை லாஸ்லியாவும், மோகன் வைத்யாவை சாண்டி, முகின் ஆகியோர்களும் கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். சாக்சியை சேரனும் வரவேற்கின்றார். ஷெரின் இந்த விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று சாக்சி வாழ்த்துகிறார்.

ஆனால் இந்த மூவரின் வருகையை கவின் மட்டும் அதிர்ச்சியோடு ஒரு ஓரமாக இருந்து பார்த்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் தற்போது கவின் குழுவில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் லொஸ்லியா என ஐந்து பேர் இருக்கின்றனர்.

இந்த ஐந்து பேர்களையும் வனிதா ஒருவரே மிக எளிதில் சமாளித்துவிடுவார் என்றாலும் தற்போது அவருக்கு மேலும் சாக்சி, அபிராமி என இருவர் ஆதரவளிக்க வந்துள்ளனர். எனவே இனிமேல் வாக்குவாதம் ஏற்பட்டால் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேரன் வழக்கம்போல் இரு அணியிலும் பட்டும் படாமல் இருப்பார் என்றும் மோகன் வைத்யா தனது கட்டிப்பிடி வேலையை மட்டும் சிறப்பாக செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்