மைக்க கழட்டி தொங்க விட்ட வனித்தா

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வனிதா நுழைந்ததில் இருந்தே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வனிதாவின் வத்திகுச்சி வேலையால் சாக்சி, அபிராமி மற்றும் மதுமிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் மட்டும் கிராமத்துக் கலைகளின் டாஸ்குகளால் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தது.

ஆனால் இந்த வாரம் தொடங்கியவுடனே கடந்த வாரத்திற்கும் சேர்த்து மொத்தமாக வனிதா தனது வேலையை தொடங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களையும் கடுப்பாக்கிய வனிதா, அதனைத் தொடர்ந்து வருகிறார்.

சேரனும் ஷெரினும் பிக்பாஸ் போட்டியில் வெல்ல தகுதியற்றவர்கள் என கவின் கூறியதாக ஆவேசம் அடையும் வனிதா,  ‘வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்’ என ஆத்திரமாக கூறி மைக்கை கழட்டி தொங்க விட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் எமோஷனலுக்கு இடம் இல்லை என்று அடிக்கடி கூறி வரும் வனிதா, தற்போது எமோஷனலாக பேசியது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் ‘வனிதாவை ஏன் பிக்பாஸ் மீண்டும் கொண்டு வந்தீர்கள்? என்று கேட்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டு வருகிறார்.

இந்த வாரம் முழுவதும் வனிதாவின் ஆவேச ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை வனிதாவிடம் இருந்து அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்’ என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்