ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் 08ஆம் திகதிக்கு முன்னர்

நவம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 8ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சிகளின் செயலாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் 9ஆம் திகதியிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்தக் கடிதங்கள், அந்தந்தக் கட்சியின் செயலாளர்களுக்கு, இன்று (02) மாலையே கிடைத்துள்ளன.

மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பமாயின், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்த முடியுமென, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசெம்பர் 2ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கல்விப் ​பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைகள் நடைபெறுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித், ​தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் நிலைமையின் பிரகாரம், நவம்பர் 9ஆம் திகதி முதல் டிசெம்பர் 2ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு கூடுதலான வாய்ப்புகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: ஈழவன்