
கல்கிஸை பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கல்கிஸை, சில்வஸ்டர் வீதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
அதில் 34 வயதான ஒருவர் கூரிய ஆயுததத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.