சாவகச்சேரி பதில் நீதிவான் விபத்தில் சிக்கி மரணம்

மூத்த சட்டத்தரணியும் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவானுமான செல்லையா கணபதிப்பிள்ளை (வயது-73) நேற்று உயிரிழந்தார்.

கைதடியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்தார்.

சாவகச்சேரி நீதிமன்றில் பதில் நீதிவானாக போர்க் காலம் தொடக்கம் நீண்டகாலமாக சேவையாற்றி வந்த மூத்த சட்டத்தரணி செல்லையா கணபதிப்பிள்ளை, தென்மராட்சி மண்ணில் பிரபல சட்டத்தரணியாக திகழ்ந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நாவற்குழி ஏ32 வீதியில் உள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்