முட்டை சாண்ட்விச் செய்முறை

ஒரு பௌலை எடுத்துகொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றிகொள்ளுங்கள். அத்துடன் உப்பு மற்றும் மிளகை சேர்த்து கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக கலக்கி பஞ்சு போன்ற மென்மையானதாக முட்டை அடித்து வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது பொரிப்பதற்கான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதன்பிறகு, முழு கரண்டியை கொண்டு அந்த முட்டை கலவையை எடுத்து கடாயில் ஊற்ற வேண்டும்.

கடாயை சாய்த்து, முட்டை எல்லா இடங்களிலும்… கடாயில் பரவுமாறு செய்ய வேண்டும்.

முட்டையானது அடிப்பாகத்தில் வேகவேண்டியது அவசியம். அவ்வாறு வெந்த பின்பு , ஆம்லெட்டின் மேலே ரொட்டி துண்டினை வைக்க வேண்டும்.

அந்த ஆம்லெட்டின் பக்கங்களை மடித்து, அந்த ரொட்டி துண்டினை கொண்டு எல்லா பக்கங்களிலும் மூட வேண்டும்.

மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வெந்ததும், அந்த ரொட்டியை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்

பாலாடைக்கட்டி துண்டுகளை ரொட்டிமீது வைக்கவேண்டும் பின்பு மடிப்புகள் கொண்ட பக்கத்தில் அவற்றை வேகவிடவேண்டும்.

அதன் பிறகு மற்ற இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள கிரீன் சட்னியை, ஸ்பூனால் ரொட்டி முழுவதும் தடவ வேண்டும்.

இந்த ரொட்டி துண்டை முட்டை ஆம்லெட் உள்ள சாண்ட்விச்சுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

பின்பு அவற்றை மூன்று துண்டுகளாக அதாவது முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவேண்டும்.

ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் (egg sandwich recipes in tamil) மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் தயாராகிவிட்டது இவற்றை கெட்ச் அப்புடனோ அல்லது புதினா சட்னியுடனோ தொட்டு சாப்பிடலாம்.


Recommended For You

About the Author: Editor