விஷ்ணுவிஷால் படப்பிடிப்பு குறித்த தகவல்!

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ மற்றும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு அவர் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் எப்.ஐ.ஆர் ‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் எப்.ஐ.ஆர்  படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 11 முதல் ஆரம்பமாக இருப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மனு ஆனந்த் என்பவர் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணுவிஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசாவில்சன், ரெபா மோனிகா ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

சுஜாதா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்திலும் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor