பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி-அபிராமி!

பிக்பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் போட்டியாளராக மாறியிருப்பது, பார்வையாளர்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் பிக்பாஸ் நிர்வாகம் நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அபிராமி வெங்கடாச்சலம், மோகன் வைத்யா மற்றும் சாக்ஸி ஆகிய மூவரும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக வர இருப்பதாகவும், ஒருநாள் மட்டும் இவர்கள் சிறப்பு விருந்தாளிகளாக இருக்கும் காட்சிகள் நாளைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே சாக்ஸி மீது கவின் கூறிய கருத்து ஒன்றுக்கு சாக்ஸி கடுமையாக பதில் அளித்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சிறப்பு விருந்தினராக நுழையும் சாக்ஸி, கவினிடம் அதுகுறித்து வாக்குவாதம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் லாஸ்லியா மட்டும் சாக்ஸி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று முன் தின நிகழ்ச்சியில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு யாரையாவது வரவழைக்க விரும்பினால் நீங்கள் யாரை வரவழைப்பார்கள் என்ற கமல்  கேள்விக்கு முகின், சாண்டி மற்றும் கவின் ஆகியோர் மோகன் வைத்யாவை வரவழைக்க வேண்டும் என்று கூறினர். இதனை அடுத்து மோகன் வைத்யா சிறப்பு விருந்தினராக இன்று ஒருநாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor