சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிபிராஜ் நடித்து வரும் ‘ரங்கா’ என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார். ராம்ஜீவன் இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை பாஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள இன்னொரு படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ‘ரேஞ்சர்’ என அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் புலி இனத்தை காக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஒரு புலி நடித்துள்ளது என்பதும் இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வரும் இந்த படத்தை தரணிதரன் இயக்கி வருகிறார். அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரங்கா, ரேஞ்சர் தவிர மாயோன், வால்டர் ஆகிய படங்களிலும் சிபிராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor