பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த ரம்யா கிருஷ்ணன்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த வாரம் கிராமத்துப்புற கலைகளால் சண்டை சச்சரவு இன்றி ஹவுஸ்மேட்ஸ்கள் போட்டியையும் மறந்து, மறந்த போன கலையை நினைவுபடுத்தினர்.

இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது.

இந்த நிலையில் இன்று கமல் தோன்றும் நாள் என்பதால் சுவாரஸ்யம் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கவினின் வீட்டில் நடந்த பிரச்சனையால் அவர் வெளியேறிவிட்டதாகவும் வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டிருக்கின்றது. அதற்கும் இன்றைய நிகழ்ச்சியில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழ் போலவே தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியும் பரபரப்பாகி வருகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து ஹவுஸ்மேட்ஸ் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் இருவர் திரைப்பட புரமோஷன்களுக்காக வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து சென்றுள்ளனர். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் ‘பாகுபலி’ சிவகாமி புகழ் ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக செல்கிறார். இதுகுறித்த புரமோ வீடியோ ஒன்று தெலுங்கு சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றது.


Recommended For You

About the Author: Editor