புத்தரின் உருவம் பொறித்த புடவையின் உண்மை இதுதான்!!

இந்தியாவில் மிக பிரபல்யமான கலம்காரி புடவை வகைகளில் வரையப்படும் உருவங்கள் புத்த பெருமானுடையது அல்லவென தெரியவந்துள்ளது.

அண்மைக்காலங்களாக இலங்கையில் இதுபோன்ற புத்தரினுடைய முகத்தை ஒத்த உடையணித்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வழிபடும் மஹவீர் ஜயந்தி எனும் தெய்வ சிலையின் முகம்தான் அது என்றும் கூறப்படுகின்றது.

குறித்த புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கான வர்ணங்கள் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுடன் இந்த புடவைகள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதியில் நெய்யப்படுகின்றன.

இது அப்பகுதியின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வகைப் புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கு நிறம் பூசுவதற்கு தனியான வகைப் பேனை பயன்படுத்தப்படுகின்றது.

மாற்று முறைகளிலும் நிறம் பூசப்படுவதுடன் மேற்படி நிறங்கள் எல்லாம் கலம் எனவும் அவற்றை பூசுபவர்களை காரி எனவும் அழைப்பது வழமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதேபோல் அப்பகுதியில் இந்து தர்மத்தை பின்பற்றுவோர் அதிகம் வாழ்வதால் விஷ்ணுவின் தச அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் புத்தப் பெருமான் என நம்பப்படுவதால் இலங்கையில் புத்தருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் மேற்படி பிரதேசத்தில் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது.


Recommended For You

About the Author: Editor