பொலிஸாரின் சீருடை கைகுண்டு, மீட்பு!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் இனங்காணபட்ட கை குண்டு மற்றும் சீருடை தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே வேளை குறித்த கை குண்டினை செயழிலக்க செய்வதற்கு நாவலப்பிட்டி பொலிஸாரினால் கம்பளை விசேட அதிரடி படையினரை வரவழைக்க தகவல் வழங்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் மீட்கபட்ட கைகுண்டு எஸ்.எப்.ஜி 87 கொண்ட கைகுண்டு ஒன்றே இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது


Recommended For You

About the Author: Editor