ஓடி ஒழிந்த மாவை – வெளிவந்த உண்மை!!

அமிர்தலிங்கத்தை சுட்டபோது மாவை ஓடி ஒளிந்து விட்டார்: கூட்டத்தில் மாவையை கழற்றிய பேராசிரியர்!

“முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, மாவை சேனாதிராசா அங்கிருந்து தப்பியோடி விட்டார். அங்கிருந்த மற்றவர்கள்தான் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.“

மாவை சேனாதிராவின் முன்பாக இப்படி உரையாற்றினார் யாழ் பல்கலைகழக பேராசிரியர் சிறிசற்குணராசா.

இன்று யாழ் தாவடியில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போதே இப்படி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சற்குணராசா,

அண்மையில் கௌரிகாந்தனுடன் கலந்துரையாடிய போது பல விடயங்கள் தெரிந்தது. அமிர்தலிங்கத்தை சுடும்போது, அவர்கள்தான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், மாவை சேனாதிராசா எங்கோ ஓடி ஒளிந்து விட்டார். இதை தெரிந்த பலர் இங்கிருக்கிறார்கள்“ என்றார்.

இதை அவர் குறிப்பிட்டபோது, அங்கிருந்த மாவை சேனாதிராசாவின் முகம் இருண்டது.

பின்னர் அவரை உரையாற்ற கூப்பிட்டபோது, நிகழ்ச்சி நிரலில் தனது பெயர் இல்லையென குறிப்பிட்டு, உரையாற்ற மறுப்பு தெரிவித்து விட்டார்.


Recommended For You

About the Author: Editor