சஹரானின் மகள் தொடர்பாக நீதவான் வழங்கிய உத்தரவு!

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனாவை அவரது மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணை வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று அம்பாறை – சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் பிரதான சூத்திரதாரியுமான சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

தற்போது சி.ஐ.டி. காவலில் மொஹமட் சஹ்ரான் ருசைனா இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor