வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வருக்கு பொங்கல்

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸவரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 4ம்திகதி (புதன்கிழமை )ஆரம்பமாகி 13ம் (வெள்ளிக்கிழமை)திகதி பூரணை தினத்தன்று நிறைவுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸவரர் ஆலய பரிபாலன சபையினர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தடை விதிதத்து வரும்நிலையில் பிரதேச மக்களின் நெருக்கடி மற்றும் போராட்டம் கொண்ட முயற்சியினால்  இன்றுவரை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல வருடங்களாக மூன்று நாட்கள் மாத்திரமே திருவிழாவினை நடத்தி வந்த நிலையில் இந்த வருடம்முதல் பத்து நாட்கள் திருவிழாவினை மேற்கொள்ள பிரதேச மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்