
மன்னாரில் ஆலயம் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு சென்றபோது யானையை கண்டு வீட்டுரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (01) நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
மன்னார், மடு, பெரியபந்திவிருச்சான் சித்திவிநாயகர் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் குறித்த பெருவிழாவிற்கு சென்ற குடும்பத்தினர் வீடு சென்ற போது வீட்டு முற்றத்தில் யானை ஒன்று வாளிகளுக்குள் தண்ணீர் தேடிக்கொண்டிருந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் யானையை காட்டுப்பகுதியை நோக்கி துரத்தி விட்டுள்ளதாக அறியமுடிகிறது.