என்னது எந்த எல்லைக்கும் போவாரா.. போகச் சொல்லுங்க பார்ப்போம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்வதை உலக நாடுகள்தான் காது கொடுத்து கேட்கவில்லை என்று பார்த்தால், அவரின் முன்னாள் மனஐவி ரெஹம் கான் பயங்கரமாக கிண்டல் செய்து, ஓட்டி தள்ளியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் பேசி வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரெஹாம் கான் கூறியதை பாருங்கள்: காஷ்மீரிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தானில் அரை மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு இம்ரான் விடுத்த வேண்டுகோள் கேலிக் கூத்தானது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலரும் விருப்பம் இன்றி இதில் பங்கேற்றனர். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இம்ரானுக்கு பதிலாக பிரதமராக பதவியேற்க காத்திருக்கிறார்.

எல்லை

இம்ரான்கான், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசுகிறார். இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச ஆரம்பித்துள்ளது. இப்போது என்ன செய்ய முடியும் நம்மால்? எல்லை இந்திய ஊடகங்கள் என்னிடம் பேட்டியெடுத்தபோது, போர்மேகம் சூழ்ந்துள்ளதே என கேள்வி எழுப்பின.

யார் போருக்கு அழைப்புவிடுத்தது என்று நான் பதிலுக்கு கேட்டேன். காஷ்மீர் விவகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என இம்ரான்கான் சொல்லியுள்ளாரே, அப்போ அதுக்கு என்ன அர்த்தம் என்று, ஊடகத்தினர் கேட்டனர்.

காஷ்மீர் எல்லை எந்த எல்லைக்கும் என்றால், ஜம்மு காஷ்மீர் எல்லை வரையாக இருக்கலாம். இந்திய எல்லைக்குள் இம்ரான் கானால் போக முடியாது. அதைத்தான் இம்ரான் வீராவேசமாக சொல்லியிருப்பார்.

காஷ்மீர் எல்லை

எல்லோரும் பாகிஸ்தானுக்குள் பதுங்கி கிடக்கிறார்கள். இவ்வாறு கேலி செய்துள்ளார் ரெஹாம் கான். இரண்டாவது மனைவி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகளான, ரெஹாம் ஒரு பத்திரிகையாளராகும்.

இவர் இம்ரானின் இரண்டாவது மனைவி. அவர்கள் இருவரும் 2015ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor