பாலியல் தொந்தரவு அதிகாரிகளிற்கு எதிராக விசாரணை!!

பாலியல் தொந்தரவு, குறித்த 70 அரச நிறுவனங்களில் உயர்பதவிகளை வகிக்கும் அதிகாரிகளிற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அதிகாரிகள் மீது பாலியல் தொந்தரவு மற்றும் சட்டவிரோதமான அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் 70 பேரையே, விசாரணைக்காக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அழைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகள், பணியிலிருந்த தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor