தெய்வம் இருப்பது எங்கே?….

சென்னை: மகா பெரியவா என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 124-வது ஜயந்தி தினம் இன்று (8.6.2017). அதாவது, அந்த மகான் அவதரித்த தினம்.

” புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி ”

என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர்

காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் “உம்மாச்சி” தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும்.


Recommended For You

About the Author: Webadmin