இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்றவர்கள் கைது!!

தமிழகத்தின் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் இருந்து, மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை தமிழக கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்


இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகள் தலைமையிலான பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன் போது, மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் விசைப்படகுடன் நின்ற 2 பேர் பொலிஸாரை கண்டது ஓட முயன்றபோது அவர்களை மடக்கிப் பிடித்து விசைப்படகை சோதனையிட்டதில், 450 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கடத்தல்காரர்களுக்கு இலங்கையில் யார் யாருடன் தொடர்பு உள்ள என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு, சுமார் 10 இலட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor