ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் 15ம் திகதி திறப்பு!

இலங்கையில் நிர்மாணிக்கபப்ட்டுள்ள ஆசியாவின் மிக உயா்ந்த கோபுரமான தாமரை தடாகம் எதிா்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத் திாிபால சிறிசேனாவால் திறந்துவைக்கப்படவுள்ளது.

ஆசியாவின் உயரமான இந்த தாமரைக் கோபுரம். 356 மீற்றர் உயரமும் கொண்டதோடு அதில் 4 நிலக்கீழ் மாடிகள் உள்ளன.

90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம், 10 ஏக்கர் விஸ்தாரண நிலம், 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி என்பது இதில் அமைக்கபப்ட்டுள்ளது.

50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் பார்வைக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

இக்கட்டிடத்தின் 215 உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே எடுக்குமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது. ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும்.

அத்துடன் இதில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்த்தாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதோடு அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கபப்ட்டுள்ளது.

கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனருடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படு்ம் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகளுக்கு 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான காலநிலையில் இலங்கை முழுவதையும் பார்க்கலாம்.

அவ்வாறே சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இந்த தாமரைத் கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor