புத்தளத்தில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

புத்தளம் – மன்னார் பிரதான வீதியுடன் இணையும் எலுவான்குளம் – கங்கேவாடி வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மதியம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்..

எலுவான்குளம் சந்தியில் இருந்து கங்கேவாடி வரையிலான சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரமுடைய இந்த வீதியை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்கு கிலோ மீற்றர் தூரமுடைய வீதி மட்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் மிகுதி இரண்டு கிலோ மீற்றர் தூரமுடைய வீதியை புனரமைக்குமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர் சென்று போராட்டக்காரர்களுடன் உரையாடிய போதும் தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் செயலாளர் அங்கு சென்றதுடன் ஒரு வார காலத்திற்குள் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Recommended For You

About the Author: Editor