பொலிசாரிடம் சிக்கிய விஷேட பாதுகாப்பு அதிகாரி!!

மன்னாரிலிருந்து நேற்று பிற்பகல் மதவாச்சிக்குச் சென்ற விஷேட பாதுகாப்பு பிரிவிலுள்ள ஒருவரிடமிருந்து 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள், போதைப் பொருள் என்பனவற்றை மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் படை முகாமொன்றில் கடமையாற்றும் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 34வயதுடைய விஷேட பாதுகாப்பு பிரிவிக்குரிய வீரர் நேற்று மாலை மதவாச்சிப்பகுதிக்கு சென்றபோது மதவாச்சி பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகள் 6, இரண்டு கிராம் கஞ்சா என்பன இராணுவ வீரரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதவாச்சி பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor