கிளிநொச்சியில் மனித மிருகங்கள் செய்த கொடூரம்!!

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்கொண்ட வெட்டுத் தாக்குதலில் குறித்த பசுவின் குடல் வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த பசுவினை கால்நடை மருத்துவரிடம் காண்பித்த போது சுகப்படுத்த முடியாது எனக் கைவிரித்து விட்டன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலயில் பாதிக்கப்பட்டு பசு இறந்துவிட்டதாகவும் அறிய முடிகின்றது.

முதியவர் ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக தொண்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட பசுவே இவ்வாறு மரணித்துள்ளது.

அது மட்டுமல்லாது வாய் பேச முடியாத மிருகங்கள் மீது இப்படியான கொடூரங்கள் நிகழ்வது மிகுந்த வேதனைக்குரி விடயம் என குறிப்பிடும் அப்பகுதி மக்கள்

மனித மிருகங்களின் கொடூரங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருப்பது அன்மைய நாட்களாக உணர முடிகிறது.

பாலியல் பலாத்காரம் – கொள்ளை – கொலை என மனித வாழ்க்கைக்கே உதவாத பல முரனான காரணங்களை ஒரு சில மனித குழம் செய்து வருகின்றமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor