பிரான்சில் மீண்டும் காவல்துறை அதிகாரி தற்கொலை!

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Unité SGP சங்கத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் காவல்துறை அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை சேவை முடித்து Val-de-Marne இல் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு முன்னால் தனது மகிழுந்தை நிறுத்திய குறித்த அதிகாரி, மகிழுந்துக்குள் வைத்து தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதிகாலை 2 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவம் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இடம்பெறும் 48 ஆவது தற்கொலையாகும். முன்னதாக ஓகஸ்ட் மாத இறுதியில் Drancy நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor