பரிஸ் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சிரியாவில் கைது

பரிஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி ஒருவன் சிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

Anouar Haddouchi எனும் இப்பயங்கரவாதி பரிஸ் மற்றும் பெல்ஜியத்தின் ப்ருஸ்லஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டவன் என அறியமுடிகிறது. தவிர தயேஸ் பயங்கரவாதிகளின் முக்கிய புள்ளியாகவும் இவன் கருதப்படுகின்றான்.

இவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தான் என்றபோதும் இத்தகவல்கள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளன. சிரியாவைச் சேர்ந்த Syrian Democratic Forces (SDF) அதிகாரிகள் இவனைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் எல்லை அண்மித்துள்ள Deir Ezzor எனும் நகரில் வைத்து இவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். நவம்பர் 13 பரிஸ் தாக்குதலில் இவன் முக்கிய அங்கம் வகித்ததாக அறியமுடிகிறது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக அவன் பிரான்சுக்கு கொண்டுவரப்படுவது தொடர்பாக எத்தகவலும் உறுதிசெய்யப்படவில்லை.


Recommended For You

About the Author: Editor