சர்வதேச கிரிக்கெட்டுக்கு இலங்கையர் இருவர் அறிமுகம்!!

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு புதுமுகங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியிருந்தனர்.

அதில் ஒன்று இலங்கை அணி வீரர் வணிந்து ஹசரங்க, அடுத்தவர் இலங்கையர்தான் ஆனால் வீரர் இல்லை. அவர் ஒரு நடுவர்,இலங்கை நடுவரான பிரகீத் ரம்புக்வெல்ல ஆவார்.

இலங்கை மற்றும் நியியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் மூலம் தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக அவர் கடமையாற்றினார்,

போட்டிக்கான கள நடுவர்களாக ரவீந்திர விமலசிறி மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் கடமையாற்றிய நிலையில் , போட்டி நடுவராக தென்னாபிரிக்கவின் அண்டி போய்க்ரோவ்ட் செயற்பட்டார்.

இதில் ரவீந்திர விமலசிறி 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டு வரும் நிலையில் பிரகீத் ரம்புக்வெல்ல  போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அரங்கிற்குள் அடியெடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor