நோர்வேயில் ஹெலிகாப்டர் விபத்து!!

நோர்வேயில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் ஆல்டா நகருக்கு அருகே ஹாட்ஸ்ப்ரேல் என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அங்கு வரும் ரசிகர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்ச்சிக்கு வந்து செல்வோருக்காக இந்த சேவையை ஹெலிட்ரான்ஸ் (Helitrans) நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் ரசிகர்கள் வந்தபோது அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைவதற்கு ஒரு சில கிலோ மீட்டரே இருந்த நிலையில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.

அதில் மொத்தம் 6 பேர் பயணித்த நிலையில், 4 பேர் உயிரிழந்த நிலையில் காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் ஹெலிகொடரில் வந்த மற்றொருவர் ,காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி முன்னெடுக்கபட்டுள்ளது. .

இதேவேளை விபத்துக்கான காரணமோ அல்லது , அதில் பயணித்தோரின் விவரங்களோ வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஹாட்ஸ்ப்ரெல் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor