
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
இவர் கடந்த ஒரு வார காலமாக வைத்தியசாலையில் உளவியல் ஆற்றுப்படுத்தல், மனநோய் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலை அறையை விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவரை பல பகுதிகளில் தேடியும் காணவில்லையெனவும், அவரின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.