இந்து முறைப்படி திருமணத்தில் இணைந்த சிங்கள தம்பதி!!

அநுராதபுரத்தில் வசிக்கும் எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குறித்த தம்பதியினரின் திருமணம் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை கேள்வியுற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

இந்த சிங்கள தம்பதி இவ்வாறு தமிழர் கலாச்சாரத்தின் படி வேட்டி, சேலை அணிந்து தாலி கட்டி திருமணம் கொண்டமை பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor